கிறிஸ்துமஸ், புத்தாண்டு பரிசு எனக் கூறி ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் பெயரில் தவறான வாட்ஸ்-அப் தகவல் போலீசில் புகார்
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எங்கள் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் கடந்த 38 ஆண்டுகளாக பொதுமக்களின் நன்மதிப்பை பெற்று இயங்கி வரும் முன்னணி ஜவுளி நிறுவனமாகும். எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்துடன் சிலர் கடந்த ஒரு வார காலமாக வாட்ஸ் அப் மூலமாக சில லிங்க்குகளை கொடுத்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசாக ரூ.20 ஆயிரம் கிடைக்கும் என்று வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

இதுபோன்று பொய்யான தகவல்கள் பரப்புபவர்கள் மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு அவர்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே இத்தகைய செய்திகளை பரப்ப வேண்டாம். இந்த வாட்ஸ் அப் மூலம் வெளியிடப்பட்ட செய்திகளுக்கும், எங்கள் நிறுவனத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் இத்தகைய நபர்களை கண்டறிந்து காவல்துறையினர் மூலம் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments