ஒமிக்ரான் எதிரொலி: தமிழகத்தின் அண்டை மாநிலம் கர்நாடகாவில் டிசம்பர் 28 முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல் - கர்நாடக அரசு அறிவிப்பு






தமிழகத்தின் அண்டை மாநிலம் கர்நாடகாவில் நாளை மறுநாள் (டிசம்பர் 28) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் இந்தியாவில் படிப்படியாக பரவி வருகிறது என்பதும் 400க்கும் அதிகமானோர் இந்தியாவில் ஒமிக்ரான் வரைஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 29 பேர்களுக்கு  ஒமிகிரான் வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் அம்மாநிலத்தில் நாளை மறுநாள் (டிசம்பர் 28) முதல் இரவுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் இந்த ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநில மக்கள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளனர்

கர்நாடகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெங்களூருவில் இன்று முதல் -மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், நிபுணர்கள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு இருந்தனர். அப்போது கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கொரோனா பரவுவதற்கு வாய்ப்புள்ளதால் வருகிற 28-ஆம் தேதியில் இருந்து 10 நாட்கள் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 28-ஆம் தேதி( அதாவது நாளை மறுநாள்) இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். கர்நாடக அரசின் இந்த உத்தரவு காரணமாக பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments