பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்ததில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம்


பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக தெருநாய்கள் அதிகமாக உலவி வருகின்றன. இந்த நாய்கள் சாலைகளில் செல்பவர்களை விரட்டிக் கடிப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று ஒருநாள் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் வெறிநாய் கடித்ததாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இதுவரை 50-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெறிநாய்களைப் பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments