பழையனூர் கிராமத்தில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் புறக்கணிப்பு: 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி என மக்கள் புகார்

சங்கராபுரத்தை அடுத்த பழையனூர் கிராமத்தில் ஊராட்சி செயலருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பழையனூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி என அக்கிராம மக்கள் நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத் துக்குட்பட்ட பழையனூர் கிராமத் தில் நேற்று முன்தினம் சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது.


கூட்டத்திற்கு கிராம மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் கூட்டத் தைப் புறக்கணித்து, ஊராட்சி செயலர் ரமேஷ் செயல்பாடு குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்களிடம் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். 100 நாள்வேலைத் திட்ட பயனாளிகள் பெயர் பட்டியலில் உயிரிழந்த வர்களின் பெயர்களை போலி ஆவ ணங்களைக் கொண்டு இணைத்து முறைகேடு நடைபெறுகிறது. வேலைக்கு வந்தவர்களுக்கு முறையான வருகைப் பதிவேடு பராமரிக்காமல் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஊராட்சியில் கட்டிடவரைபட அனுமதிக்கு கையூட்டாகபல ஆயிரம் கேட்பதாகவும், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அலுவலர்களிடம் கிராம மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த கூட்டத்தை ரத்துசெய்து, மாவட்ட ஆட்சியர் தலை மையில் கூட்டம் நடத்தினால் தான்கிராமசபைக் கூட்டத்தில் பங் கேற்பதாக கூறி பொதுமக்கள் கலைந்துச் சென்றனர்.

இதுதொடர்பாக சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந் திரனிடம் கேட்போது," ஊராட்சிகள் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் தான் அப்பிரச்சினையைக் கையாள்கிறார்" என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments