ஜெகதாப்பட்டினத்தில் சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி சுனாமி எனும் பேரலை ஏற்பட்டது. இதில் தமிழகத்தின் கடலோர கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்த மீனவர்களுக்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 26-ந் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் சார்பில் சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது பெண்கள் கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும், மீனவர்கள் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments