பொங்கல் பரிசு தொகுப்பை பெற கைரேகை கட்டாயமா?- அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் !




பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கு கைரேகை கட்டாயமில்லை என்று தமிழக உணவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கவுள்ளது. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைபருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, துணிப்பை ஆகியவை இடம்பெறுகின்றன. அதோடு ஒரு முழுநீள கரும்பும் வழங்கப்பட உள்ளது.

இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்கள், மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள 21 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு இருப்பு வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்முறை கிடங்கில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பொங்கல் பொருட்கள் தரத்தை ஆய்வு செய்தார்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கான 21 அத்தியாவசிய பொருட்கள் கொண்ட தொகுப்பானது 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும். மேலும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெறுவதற்கு கைரேகை கட்டாயம் இல்லை, குடும்ப அட்டையில் பெயர் உள்ள நபர்கள் யார் வேண்டுமானாலும் நியாயவிலைக் கடையில் வந்து பெற்றுச் செல்லலாம். அதே நேரத்தில் வழக்கமான பொருட்களை பெறுவதற்கு கைரேகை கட்டாயம்.

முன்னதாக பரிசுப் பொருள் தொகுப்பினை பெறுவதற்கு டோக்கன் வினியோகம் செய்யப்படும். பொங்கல் பண்டிகைக்கு பணம் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார் என தெரிவித்தார்.
 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments