வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க வேண்டுகோள்
கடந்த 2014, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவினை பல்வேறு காரணங்களில் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் அவர்களது பதிவினை புதுப்பித்திருக்க வேண்டிய காலம் 1.1.2014 முதல் 31.12.2019 வரை இருக்குமானால் அறிவிப்பு வெளியான கடந்த 2-ந் தேதி முதல் 3 மாதங்களுக்குள் அதாவது வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதிக்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கோ அல்லது பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி வரை பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு கலெக்டர் கவிதாராமு கேட்டுக் கொண்டுள்ளார்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments