கோட்டைப்பட்டினம் மீனவர் வலையில் சிக்கிய 33 கிலோ கூறல் மீன் ரூ.4 லட்சத்துக்கு விலை போனது
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று கரை திரும்பினர். அப்போது மீனவர் ஒருவர் வலையில் 33 கிலோ எடை கொண்ட கூறல் மீன் சிக்கியது. அந்த மீனை வியாபாரி ஒருவர் ரூ.4 லட்சம் கொடுத்து வாங்கி சென்றார். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், பொதுவாக கூறல் மீன்கள் அடிக்கடி வலையில் சிக்குவதில்லை. மிகவும் அரிதாக சிக்கக் கூடிய மீன். இந்த மீன் பெரும்பாலும் உணவுக்காக பயன்படுத்துவதில்லை. இந்த மீனின் வயிற்றில் நெட்டி என்ற குடல் பகுதி காணப்படும். இந்த நெட்டி மருத்துவ குணம் உடையது. இதனாலேயே இவ்வகையான மீன்கள் அதிக விலை போகிறது என்று கூறினார்கள்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments