மணமேல்குடி அருகே பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
மணமேல்குடி ஒன்றியத்தில் பொன்னகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் இளங்கோவன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் முன்னிலை வகித்தார். ஆராய்ச்சி இயக்குனர்களாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கல்வியாளர் மாரியப்பன் விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே ஆய்வு மேற்கொண்டு அதன் பின் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பல்வேறு காணொலிகள் படங்கள் மூலம் செயல்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. 

மாணவர்கள் சுனாமி, புயல், வெள்ளம், வறட்சி, தீ விபத்து, இடி, மின்னல், போக்குவரத்து, மற்றும் கூட்ட நெரிசல் இவைகளில் பாதுகாப்பு வழிமுறைகள் மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சியாக வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பழனி நன்றி கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments