மருத்துவ படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு இல்லை மாணவர் சேர்க்கை செயலாளர் அறிவிப்பு



தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செய்ய வருகிற 7-ந் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்ப பதிவு செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தபால், கூரியர் மூலமாகவோ அல்லது மருத்துவ கல்வி இயக்ககத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சமர்ப்பிக்க 10-ந் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி, விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்ப பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் விண்ணப்ப பதிவு செய்வதற்கும், பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும் மேலும் அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கால அவகாசத்துக்குள் விண்ணப்ப பதிவு செய்துவிட வேண்டும் என்றும் மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் வசந்தாமணி தெரிவித்துள்ளார். அதேபோல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடியும் என்ற நிலையில், மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க அறிவுறுத்தியது பரபரப்பாக பேசப்பட்டது. ஏனென்றால் விண்ணப்பித்தவர்களில் சிலர் 18 வயதை பூர்த்தி அடையாதவர்களும் இருக்கின்றனர். இந்தநிலையில், வருகிற 3-ந் தேதியில் இருந்து 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. எனவே ஏற்கனவே அறிவித்திருந்த அறிவிப்பின்படி, கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வது நல்லது என்று மருத்துவ கல்வி இயக்ககம் கூறியுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments