வருமுன் காப்போம் மருத்துவ முகாம் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ஆவுடையார் கோவில் அருகே ஒக்கூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். முகாமில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை, கொரோனா தடுப்பு ஊசி, குழந்தை மருத்துவம் சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ முகாமில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவ முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டுவீட்டு மனைப்பட்டா முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவைகளை அப்பகுதி பொதுமக்களுக்கு வழங்கினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments