கோபாலப்பட்டிணம் கல்லுக்குளம் பகுதி குப்பை மேட்டை சுத்தம் செய்து வரும் இடத்தில் மீண்டும் குப்பை கொட்டிய நபர்




 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கல்லுக்குளம் குப்பை மேட்டை  டிசம்பர் 28 செவ்வாய் கிழமை ஜமாத்தார்கள் ,&ஊர் பொதுமக்கள் மூலம் அனைத்து குப்பைகளையும் அகற்றி எழில்மிகு அழகிய இடமாக மாற்றியுள்ளார்கள்.

இரண்டு நாட்களாக வேலி அடைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. குப்பை கொட்டதீர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தீடீரென அந்த இடத்தில் அங்குள்ள நிர்வாகிகள் செல்லும் போது குப்பைகள் பார்த்தவுடன் கவலை அடைய செய்து உள்ளது. மேலும் ஜமாஅத் சார்பில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

குப்பை மற்றும் கழிவுகளை கொட்டி வந்த தாய்மார்கள், தந்தைமார்கள், சகோதரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று கொட்டக் கூடிய அண்ணன்மார்கள், தம்பிமார்களே தயவு செய்து இனி அந்த இடத்தில் குப்பைகளை கொட்ட வேண்டாம். இங்கு மரங்களை வைத்து சோலைவனமாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு உள்ளனர்.

எனவே அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாகவும், நமது பகுதியை நாம் தான் சுத்தமாக வைத்திருக்க முடியும் என்ற உயர்ந்த நோக்குடன் பொதுமக்களாகிய நாம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு நமது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

நமதூரை சேர்ந்த வெளிநாடு‌ வாழ், வெளியூர் வாழ் மற்றும் உள்ளூர் வாழ் சகோதரர்கள் தங்கள் குடும்ப உறவுகளிடம் இந்த செய்தியை பகிர்ந்து அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

அன்பான தாய்மார்களே.... 
உங்கள் வீட்டில் சேரும் குப்பை மற்றும் கழிவுகளை பொது இடத்தில் கொட்டுவதை தவிர்த்து, தினந்தோறும் உங்கள் வீட்டு வாசலுக்கு வரும் குப்பை வண்டிகளில் கொடுத்து நாம் வசிக்கும் பகுதியை சுகாதாரமாக வைத்து கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு தாழ்மையுடன் ஊர் ஜமாத், ஊராட்சி நிர்வாகம் மற்றும் GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

நம்முடைய பகுதியை நாம்தான் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும் ஆகவே ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம்.

குறிப்பு: உங்கள் பகுதிக்கு குப்பை வண்டி வரவில்லையென்றால் வார்டு உறுப்பினர்கள் அல்லது ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்...

அவ்வாறு தெரிவித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களுடைய GPM மீடியா வாட்ஸ்ஆப் நம்பருக்கு https://wa.me/918270282723 உங்கள் வீட்டின் வெளியே குப்பைகளை வைத்து புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்...

மாற்றம் ஒன்றே மாறாதது... ஆகவே முதலில் நம்மிடமிருந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்.. நமதூரை சுத்தமாக வைத்திருப்போம்...

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments