இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களது குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சி அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

ஜெகதாபட்டினத்தில் இருந்து கடந்த 20-ம் தேதி வாசு செல்லம்செட்டி ஆகிய இருவருக்கும் சொந்தமான படகில் 13 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாக மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்கத்திற்கு வந்த அறந்தாங்கி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் பேசி மீனவர்களை விடுவிக்க மத்திய அரசிடம் கடிதம் வழங்கியுள்ளதாகவும் விரைவில் அவர்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறுதியளித்தார்.
மேலும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி உதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மணமேல்குடி திமுக ஒன்றிய துணைத்தலைவர் சீனியர்,

ஆவுடையார்கோவில் காங்கிரஸ்  வட்டாரத் தலைவர் முத்து, மீனவர் சங்க தலைவர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments