வாகன ஆவணங்கள் புதுப்பிக்க டிச.31 வரை அவகாசம் நீட்டிப்பு: சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு!



வாகனச் சான்று, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை புதுப்பிக்கும் அவகாசம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவகாசம் அதற்கு மேல் நீட்டிக்கப்படாது என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், வாகனச் சான்று, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும் அவகாசம் தொடர்ந்து பல்வேறு கட்டமாக நீட்டிக்கப்பட்டு வந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும், போக்குவரத்தில் இன்னும்வழக்கமான நிலை திரும்பவில்லை.

எனவே, வாகனங்களுக்கான ஆவணங்கள் புதுப்பிக்கும் அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள், லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

கரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக, வாகனப் பதிவு,வாகனச் சான்று உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் தொடர்ந்து செல்லுபடியாகும் வகையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக, டிச.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மோட்டார் வாகன சட்டம் 1988, மோட்டார் வாகன விதிகள் 1989-ன் கீழ் வாகனங்களின் தகுதிச் சான்றிதழ், புதுப்பித்தல், அனுமதிச் சீட்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம்டிச.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவே கடைசி நீட்டிப்பு ஆகும். இதற்கு மேல் நீட்டிப்பு வழங்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments