கோபாலப்பட்டிணத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி ரூ.7.5 லட்சம் நிதி ஒதுக்கீடு!கோபாலப்பட்டிணத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.கோபாலப்பட்டிணம் மையவாடியில் இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அமைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலபட்டிணத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்களின் நிதியிலிருந்து சுமார் 7.5 இலட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று 05.12.2021 உயர் கோபுர மின் விளக்கு அமைக்க கோபாலப்பட்டிணம் மையவாடியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

கோபாலப்பட்டிணத்திற்கு உயர் கோபுர மின் விளக்கு கொண்டு வர முயற்சி எடுத்த ஆவுடையார்கோவில் திமுக ஒன்றிய செயலாளர் உதயம் சண்முகம் மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் J.தாஹிர் அவர்களுக்கு ஊர் பொது மக்கள் சார்பாகவும், GPM மீடியா சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments