நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி சார்பில் கோபாலப்பட்டிணத்தில் சிறப்பு கணினி பட்டா திருத்தம் முகாம் நடத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் சேவைகளை பொது மக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் வண்ணமாகவும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் பட்டா தொடர்பான மனுக்கள் பெற்று தீர்வு காண சிறப்பு முகாம்கள் நடத்தி பொங்கல் 2022க்குள்ளாக பொது மக்களின் குறைகளை முழுமையாக களைந்திட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஒவ்வொரு புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு தாலுகாக்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும்,
சிறப்பு முகாம் நடத்தப்படும் நாள், வருவாய் கிராமம் (ம) இடம், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களால் முன்கூட்டியே விளம்பரப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்று வெளியிட்டிருந்தார்.
அதனடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி மீமிசல் சுற்றுவட்டார பகுதிக்கான பட்டா தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறும் என ஆவுடையார்கோவில் வட்டாச்சியர் அறிவித்திருந்தார். ஆனால் 27-ஆம் தேதி நடைபெற இருந்த பட்டா தொடர்பான சிறப்பு முகாம் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்படுவதாகவும், மற்றொரு நாளில் நடைபெறும் என மீமிசல் வருவாய் ஆய்வாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மீமிசல் பகுதியில் எப்பொழுது பட்டா தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்படும் என மீமிசல் வருவாய் ஆய்வாளரிடம் GPM மீடியா சார்பில் கேட்கப்பட்டது, அப்பொழுது அவர் கூறியதாவது, நான் விடுமுறையில் இருந்தபொழுது பட்டா தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்பட்டுவிட்டது என தெரிவித்தார். மேலும் பட்டா குறித்து யாருக்காவது பிரச்சனைகள் இருந்தால் மீமிசல் வருவாய் ஆய்வாளராகிய என்னை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
கோபாலப்பட்டிணத்தில் ஏராளமானவர்களுக்கு பட்டா குறித்து பிரச்சனைகள் இருப்பதால் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி சார்பாக பட்டா தொடர்பான சிறப்பு முகாம் நடத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டா தொடர்பான சிறப்பு முகாமை தங்கள் பகுதியில் உள்ள மக்கள் பயனடையும் வகையில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருவது குறிப்பித்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.