கோபாலப்பட்டிணம்-அவுலியா நகர் மைத்தாங்கரை பின்புறம் உள்ள மண் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை!!கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில மாதமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் (பட்டணம்  -அவுலியா நகர்) மைத்தாங்கரை பின்புறம் ‌உள்ள மண் சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பட்டணம் மற்றும் அவுலியா நகரை இரண்டு பாதைகள் இணைக்கக்கூடியதாக உள்ளது. இதில் ஒன்று தார்ச்சாலையும் இன்னொன்று மண் சாலை ஆகும். முதலாவது பாதை பெரிய பள்ளிவாசலில் இருந்து நெடுங்குளம் வழியாக செல்லும் தார்ச்சாலை, இந்த சாலையை இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள்.இப்பகுதியில் ஆண்கள் குளிக்கும் பகுதி இருப்பதால் பெரும்பாலும் பெண்கள் இப்பாதையை பயன்படுத்துவதில்லை. மைத்தாங்கரைக்கு பின்புறமாக உள்ள இன்னொரு மண் சாலையை பெண்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் மழை நீர் இந்த பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பாதையை பயன்படுத்தும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
 
மண் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றி அந்த பாதையை பயன்படுத்தும் வகையில் ஊராட்சி நிர்வாகம் சரிசெய்து தர வேண்டும் என்பது அந்த வழியாக செல்லும் பெண்களின் கோரிக்கையாக உள்ளது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments