கோபாலப்பட்டிணத்தில் தனியார் நிறுவனத்தின் புதிய செல்போன் கோபுரம் (டவர்) அமைக்கும் பணி ஆரம்பம்!கோபாலப்பட்டிணத்தில் புதிய செல்போன் கோபுரம் (டவர்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் புதிய செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. 
இந்நிலையில் கோபாலப்பட்டிணம் ஜமாஅத்தார்களின் முயற்சியால் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள ஜாமத்திற்கு சொந்தமான இடத்தில் (உமர் முக்தார் நற்பணி மன்றம் எதிரில்) புதிய செல்போன் கோபுரம் அமைக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று 27.12.2021 தனியார் நிறுவனம் தனது புதிய செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. விரைவில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என ஜமாத்தார்கள் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments