மீமிசலில் மொபட் மீது பைக் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழப்புமீமிசலில் மொபட் மீது பைக் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

மீமிசலை அடுத்த பில்லுவலசையை சேர்ந்தவர் சிதம்பரம் (65) விவசாயி இவர் இரண்டு நாளைக்கு முன் தனக்கு சொந்தமான மொபட்டில் மீமிசல் கடைவீதிக்கு சென்றார். அப்போது அவர் சாலையை கடக்க முயன்ற போது கோபாலப்பட்டிணத்தைச் சேர்ந்த முகம்மது நசிர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிதம்பரத்தின் மொபட் மீது மோதியது. 

இதில் படுகாயமடைந்த சிதம்பரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிதம்பரம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மீமிசல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments