மலேசியாவை புரட்டிப்போட்ட கனமழை - இயல்பு வாழ்க்கை முடக்கத்தால் தவிக்கும் மக்கள்!



மலேசியாவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக பல்வேறு சாலைகள் மூடபட்டடுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் என சுமார் 66 ஆயிரம் பேர் நாடு முழுவதும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.
1000 பேர் வரை மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மழைநீர் தேங்கியதால் பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன. மலேசியாவின் மிகப்பெரிய துறைமுகமான கிளாங் துறைமுகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments