ஆற்றங்கரை ஊராட்சியின் சார்பாக நடைபெற்ற ஆதார் சிறப்பு முகாம்!ஆற்றங்கரை ஊராட்சியின் சார்பாக தபால் நிலையம் மூலம் முதல் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை ஊராட்சியில் 17.12.2021 அன்று ஆற்றங்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சியின் முயற்சியில் தபால் நிலைய அலுவலர் மூலம் 100 மேற்பட்டவர்களுக்கு ஆதார் புதிய கார்டு திருத்தம், முகவரி திருத்தம், குழந்தைகளுக்கான புதிய கார்டு போன்ற பணிகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் செ.முகமது அலி ஜின்னா தலைமையிலும், ஊராட்சி மன்ற துணை தலைவர் அ.நூருல் அஃபான் மற்றும் தபால் அலுவலர்கள் ரிஸ்வானா முபின், போஸ்ட்மேண் இளையராஜா முன்னிலை வகித்தார்கள்.

இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக  தலைமை அஞ்சல் அதிகாரி ராஜா செல்வம் மற்றும் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி M. S.தஸ்தகீர் அவர்கள் வருகை புரிந்தார்கள்.

இந்நிகழ்வில் முஸ்லிம் ஜமாத் செயலாளர் நாகூர் கனி, இந்து சமூக தலைவர் முருகேசன், வார்டு உறுப்பினர்கள் ஆற்றங்கரை நாகராஜ், சேர்வைக்காரன் ஊரணி நாகராஜ், முஸ்லிம் ஜமாத் பொருளாளர் ஹாஜி ரியாஸ், திமுக இளைஞரணி அதுனான், இஸ்லாமிய வாலிபர் சங்க செயலாளர் பைசூல் கரிம், தமுமுக மன்சூர், ஜலால், எஸ்டிபிஐ உமர், நாசர் அலி  உட்பட இராமநாதபுரம் தபால் பணியாளர்கள் சிவா, கார்த்திக், ரமேஷ் இராமநாதபுரம் தலைமை அஞ்சலகம் இராமநாதபுரம் உபகோட்ட மெயில் ஓவர்சியர் சிவானந்தம் மற்றும் முரளி உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் இருந்தார்கள்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments