நெதர்லாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்! ஒமைக்ரான் காரணமாக நெதர்லாந்து பிரதமர் அறிவிப்பு!!



பிரிட்டனில் முழு முடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், 'ஒமிக்ரான்' பரவலால் நெதர்லாந்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

'ஒமிக்ரான்' பரவல் காரணமாக நெதர்லாந்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் கரோனா ஐந்தாவது அலை பரவி வருகிறது. நாளுக்கு நாள் 'ஒமிக்ரான்' பாதிப்பு அதிகரித்து வருவதால், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் வரும் ஜனவரி 14- ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

'ஒமிக்ரான்' பரவல் காரணமாக பிரான்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. உலகில் பல்வேறு நாடுகளிலும் மீண்டும் பொதுமுடக்கம் அமலாகவுள்ளது. 

'ஒமிக்ரான்' அச்சுறுத்தலால், உலகில் பல்வேறு நாடுகளும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments