நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் தூண்டுதலின் பேரில் பணி செய்யவிடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் துறையிடம் புகார் மனு அளித்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்!



புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் தூண்டுதலின் பேரில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல விடாமலும், பணி செய்யவிடாமலும் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காவல் துறையிடம் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த 08.12.2021 புதன்கிழமை முற்பகல், நாட்டாணிபுரக்குடி கிராம ஊராட்சி மன்றக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலந்துகொள்ள வேண்டும் என உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) புதுக்கோட்டை அவர்கள் அறிவுறுத்தியதின்படி இன்று (8.12.2021) 11.00 மணிக்கு கூட்டத்தில் கலந்துகொண்டேன். இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததற்கு நீங்கள் தான் காரணம் எனக்கூறி என்னை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், எனது வாகனத்தின் சாவியினை திரு.சுபையர், திரு.முகமது யாசின் மற்றும் திரு.பசீர் அகமது ஆகியோர் எடுத்துக் கொண்டு என்னை வெளியே செல்ல விடாமலும், பணி செய்ய விடாமலும் தடுத்தனர்.

நான் இதய நோயாளி, எனக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட்டி (ஸ்டஸ்ட்) சிகிச்சை செய்து மருத்துவ ஆலோசனை பெற்று வருகிறேன். இந்த சம்பவம் எனது மன நிலையை மிகவும் பாதித்துள்ளது. நான் பாதுகாப்பாக பணி செய்வது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.

ஆகவே நாட்டாணிபுரசக்குடி கிராம ஊராட்சித் தலைவரின் தூண்டுதலில் செயல்பட்ட மேற்காணும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தகவல்:எஸ்.கணேசன், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் (தொகுதி-IV), ஊராட்சி ஒன்றியம், ஆவுடையார்கோவில்.

கடந்த செப்டம்பர் மாதம் முத்துக்குடா 12-வது வார்டு உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அளித்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments