திருச்சி, புதுக்கோட்டையில் மேலும் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி புதிதாக 24 பேருக்கு கொரோனா
திருச்சி, புதுக்கோட்டையில் நேற்று மேலும் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.

தலை தூக்கும் ஒமைக்ரான்

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று ஒரு புறம் படிப்படியாக குறைந்து வந்தாலும், அடுத்தப்படியாக ஒமைக்ரான் வைரஸ் தொற்று தலை தூக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 121 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். 91 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 27 பேர் ஒமைக்ரான் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் உறுதி

இந்த நிலையில் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று முன் தினம் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி ஆகி இருந்தது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக திருச்சி-2, புதுக்கோட்டை-2 என 4 பேருக்கு இதுவரை ஒமைக்ரான் தொற்று உறுதியானது.

21 பேருக்கு கொரோனா

இந்த நிலையில் திருச்சியில் நேற்று புதிதாக கொரோனா தொற்று 21 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளன. 10 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தொடர் சிகிச்சையில் 135 பேர் உள்ளனர். இதுவரை கொரோனாவால் 78 ஆயிரத்து 912 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 77 ஆயிரத்து 675 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை 1,102 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுக்கோட்டை

இதுபோல புதுக்கோட்டையில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. இதுவரை 30 ஆயிரத்து 388 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். இதுவரை மொத்தம் 29 ஆயிரத்து 951 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 16 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments