பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் 20-ந்தேதிக்குள் செலுத்த அரசு உத்தரவு





நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டணத்தொகையை பெற்று, அந்த தொகையை ஆன்லைன் மூலம் வருகிற 20-ந்தேதிக்குள் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் செலுத்த வேண்டும்.

அதன்படி, செய்முறை கொண்ட பாடங்கள் அடங்கிய பாடத்தொகுப்பில் படிப்பவர்களுக்கு ரூ.225-ம், செய்முறை இல்லாத பாடங்களை கொண்டவர்களுக்கு ரூ.175-ம் தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்வு கட்டணத்தில் இருந்து தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.

அதேபோல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.எஸ்., எஸ்.டி., எம்.பி.சி./டி.சி. பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கும் (தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழிகளில் படிப்பவராக இருந்தாலும்), பி.சி., பி.சி.எம். பிரிவில் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments