இதோ வந்துருச்சு 'கொரோனா மாத்திரை'.. வெறும் 35 ரூபாய் தானா.. அப்படியா !!

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கென்று மாத்திரை மருந்து எதுவும் இல்லாத நிலை நிலவி வந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அமெரிக்காவின் மெர்க் ஷார்ப் டோஹ்மே நிறுவனம் மோல்னுபிரவிர் (மோல்புளூ) என்ற மாத்திரையை (கேப்சூல்) உருவாக்கி உள்ளது.

இந்த மாத்திரையை இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரித்து வழங்க, அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ.35. ஒரு அட்டையில் 10 கேப்சூல்கள் இருக்கும்.

முழுமையான சிகிச்சைக்காக 40 கேப்சூல்கள் விலை ரூ.1,400 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை இந்தியாவில் மட்டுமல்லாது, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் வினியோகம் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments