கோபாலப்பட்டிணத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 808, புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 லட்சத்து 63 ஆயிரத்து 126 கலெக்டர் கவிதாராமு தகவல்!!புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 63 ஆயிரத்து 126 ஆகும் என கலெக்டர் கவிதாராமு தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் 3 ஆயிரத்து 808 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் 1874 ஆண் வாக்காளர்களும், 1934 பெண் வாக்காளர்களும் என சேர்த்து மொத்தம் 3808 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வார்டு வாரியாக PDF Link இணைக்கப்பட்டுள்ளது Download செய்து கொள்ளுங்கள்...

பாகம் 149- DOWNLOAD PART 149   GOOGLE DRIVE LINK

பாகம் 150- DOWNLOAD PART 150     GOOGLE DRIVE LINK

பாகம் 151- DOWNLOAD  PART 151    GOOGLE DRIVE LINK

பாகம் 152- DOWNLOAD PART 152     GOOGLE DRIVE LINK

இதுதொடர்பான மேலும் தகவல்களுக்கு தமிழக தேர்தல் ஆணையத்தின் elections.tn.gov.in மற்றும் https://electoralsearch.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணலாம். புதிதாக தங்கள் பெயர்களைச் சேர்க்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகளிடம் படிவம் எண் 6ஐ சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் www.nvsp.in என்ற இணையதளத்தைக் காணலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் Voter Helpline App என்ற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022-ன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கவிதாராமு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.

அதனை மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி பெற்றுக்கொண்டார். அதன்பின் கலெக்டர் கவிதாராமு கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 லட்சத்து 70 ஆயிரத்து 877 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 92 ஆயிரத்து 178 பெண் வாக்காளர்களும் மற்றும் 71 மூன்றாம் பாலினத்தவர்களும் என சேர்த்து மொத்தம் 13 லட்சத்து 63 ஆயிரத்து 126 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டதில் மொத்தம் 13 லட்சத்து 51 ஆயிரத்து 878 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன்பின் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது 8,906 ஆண் வாக்காளர்கள், 11 ஆயிரத்து 333 பெண் வாக்காளர்கள் மற்றும் 7 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 20 ஆயிரத்து 246 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேபோல 4 ஆயிரத்து 476 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 519 பெண் வாக்காளர்கள் மற்றும் 3 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 8 ஆயிரத்து 998 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பு முறை சுருக்கத் திருத்தத்தில் 18 முதல் 19 வயதுடைய இளம்வாக்காளர்கள் 24 ஆயிரத்து 57 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,559 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர எல்கைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்கைக்குள் 856 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 941 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா, தண்டாயுதபாணி, சொர்ணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments