கோபாலப்பட்டிணத்தில் கொள்ளை போன வீட்டின் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 559 பவுன் நகைகள் அறந்தாங்கி கோர்ட்டில் ஒப்படைப்பு
கோபாலப்பட்டிணத்தில் கொள்ளை போன வீட்டின் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 559 பவுன் நகைகள் அறந்தாங்கி கோர்ட்டில் ஒப்படைப்பு

தொழில் அதிபர் கொள்ளை போன வீட்டின் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட  559 பவுன் நகைகள் அறந்தாங்கி கோர்ட்டில் ஒப்படைப்பு 

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஜகுபர் சாதிக் (வயது 51), தொழில் அதிபர். கடந்த மாதம் 27-ந் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் பீரோவில் வைத்திருந்த 750 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர்.

கோர்ட்டில் ஒப்படைப்பு

கடந்த 29-ந் தேதி தொழில் அதிபருக்கு சொந்தமான வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது மர்ம ஆசாமிகள் 559 பவுன் நகைகளை கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு அந்த நகைகளை போலீசார் மீட்டனர். இந்த நிலையில் 559 பவுன் நகைகளை அறந்தாங்கி கோர்ட்டில் கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ஒப்படைத்தனர்.

3 தனிப்படை அமைப்பு

மேலும் கொள்ளை போன 191 பவுன் நகைகளை மீட்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments