பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளும்போது இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை




புதுக்கோட்டை மாவட்டத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டு நடப்பு சம்பா பருவத்தில் மகசூலை கணக்கிட 2,800 பயிர் அறுவடை பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன. தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் தலா 4 திடல்கள், புள்ளியியல் துறையினரால் வழங்கப்படும் எதேச்சை எண்கள் மூலம் வருவாய்த்துறை ஆவணங்களுடன் சர்வே எண்கள் கண்டறியப்பட்டு அறுவடை மேற்கொள்ளப்படும்.
தற்போது நெல் சம்பா அறுவடை தொடங்கியதால் சில கிராமங்களில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள அலுவலர்கள் வரும்போது அந்த கிராமத்து விவசாயிகள் திட்டத்தை செயல்படுத்த இடையூறுகளை ஏற்படுத்துவதாக தகவல் வருகின்றன. பயிர் அறுவடை பரிசோதனை செய்யும் இடத்தில் சம்பந்தப்பட்ட சர்வே எண்ணின் சாகுபடிதாரர், வேளாண்மைத்துறை, புள்ளியியல்துறை, வருவாய்த்துறை மற்றும் பயிர் காப்பீடு நிறுவன அலுவலர்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுவர். இதைத்தவிர வேறு எந்த ஒரு அலுவலரோ, விவசாயிகளோ அல்லது இதர நபர்களோ இருந்தால் மேற்படி பயிர் அறுவடை பரிசோதனை நடத்த இயலாமல் போனால் கிராமத்திற்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க இயலாது. பயிர் அறுவடை பரிசோதனைக்கு ஏதாவது இடையூறு செய்தால் தொடர்புடைய நபரின் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படும். இதனை கருத்தில் கொண்டு தங்கள் கிராமங்களில் நடைபெற உள்ள பயிர் அறுவடை பரிசோதனைகளை சரியான முறையில் நடத்திட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments