குறைதீர் கூட்டங்கள் நிறுத்தி வைப்பு இனி வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம் - புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்
பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ் அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் பதிவிடலாம் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு:

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடந்து வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாதம்தோறும் நடந்துவந்த விவசா யிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் உட்பட அனைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்களும் கரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் தமிழக அரசிடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் தங்கள் குறைகளை 9445008146 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், pag.pdkt@gmail.com மற்றும் yseccoll.tnpdk@nic.in என்ற இமெயில் முகவரியிலும் பதிவிடலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments