ஆவுடையார்கோவில் வட்ட வழங்கல் அதிகாரி லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்
குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் செய்வதற்க்கு நேற்று லஞ்சம் வாங்கிய, வட்ட வழங்கல் அதிகாரியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதில் வட்ட வழங்கல் அதிகாரியாக முருகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் குடும்ப அட்டையில் பெயர்திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்க்கு பொது மக்களிடம் கட்டாய லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக புதிய குடும்ப அட்டைக்கு ரூ1000, பெயர் சேர்க்க ரூ 500, பெயர் திருத்தம் செய்ய ரு 200 என நிர்ணயம் செய்துள்ளார் என்றும கூறப்படுகிறது.


இந்நிலையில் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் செய்வதற்க்காக ஆவுடையார்கோவில் வட்ட வழங்கல் அலுவலகத்திற்க்கு சென்றுள்ளார். அப்போது வட்ட வழங்கல் அதிகாரி முருகேசன் அவரிடம் ரூ 200 லஞ்சம் கேட்டுள்ளார். வேறு வழியின்றி ரூ 200 கொடுத்து அந்தப் பெண் தனது வேலையை முடித்துக் கொண்டு சென்றுள்ளார்.

இதனை சில  நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்ப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments