ஆன்லைன் வர்த்தகமும் அதன் ஆபத்தும்!
ஆன்லைன் வர்த்தகமும் அதன் ஆபத்தும்!

கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் வெளியிடும் விழிப்புணர்வு செய்திக்குறிப்பு

அன்பார்ந்த என்றும் உதவும் கரங்கள் நண்பர்களே
சகோதர சகோதரிகளே!

சில மாதங்களாக நமதூரில் மட்டுமல்லாது கடற்கரையோர கிராம்ப்புற பகுதிகளில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது என்பது கனிசமாக அதிகரித்துவருகிறது.மேலும் ஆன்லைனில் வாங்கினால் குறைவான விலையில் பொருட்கள் கிடைக்கிறது என்று கருதினாலும் அதன் பின்னால் இருக்கின்ற ஆபத்தினை யாரும் உணர்வதில்லை குறிப்பாக பெண்கள் உணர்வதில்லை.
இன்னும் சொல்லப்போனால் பல ஊர்களில் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை கொடுக்க வரும் டெலிவரிமேன்-களோடு பெண்களுக்கு தொடர்பு ஏற்பட்டு அது நாளடைவில்  குடும்பத்தை விட்டு வெளியேறி வெகு தொலைவில் செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாது நமதூரில் ஏராளமானோர் Unwanted (தேவையில்லாத) UnSecured(பாதுகாப்பில்லாத)என்று சொல்லக்கூடிய  (ஷேர்சாட்,மோஜோ,டிக்டாக் இன்னும் சில) ஆப்களை மொபைலில் டவுன்லோடு செய்து அதை பயன்படுத்தியும் 
வருகின்றனர்.இதில் என்ன பிரச்சனை அதில் நல்ல பாட்டையும் ஹதீஸ்களையும் பயான்களையும் தானே கேட்கிறோம் என்று கூறினால் அது தான் தவறு!
தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியில் மொபைல் பயன்பாட்டில் எதுவுமே 100% பாதுகாப்பு கிடையாது.
இதுபோன்ற ஆப்களை நீங்கள் பயன்படுத்தும் போதும் பயன்படுத்தாத போதும் அது Background-ல் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.எந்த மாதிரியாக இயங்குகிறது என்பதை நீங்கள் அறிந்துகொண்டால் நீங்கள் வியப்படைவீர்கள் ஆம்!
உங்களுடைய அனுமதி  இல்லாதபோதும் உங்கள் மொபைலின் Front Camera( முன்பக்க கேமரா) மற்றும் Back Camera (பின்பக்க கேமரா)வின் மூலம் யாரோ ஒருவர் உங்களை பார்த்துக்கொண்டும் கண்காணித்துக்கொண்டும் உங்களுடைய அந்தரங்க ரகசியங்களையும் புகைப்படங்களையும் மற்ற தரவுகளையும் சேமித்து அதைவைத்து மிரட்டி ஏமாற்றும் சூழ்நிலை ஏற்படும்.
இதுபோன்ற மிக ஆபத்தான மொபைல் பயன்பாட்டில் மிக கவனமாக இருக்கவேண்டும்.தேவையற்ற ஆப்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் அதை Uninstall செய்யவேண்டும்.
சில நாட்களுக்கு முன்பு முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை வைத்து அவர்களை  ஏலம் விட்ட மஹராஸ்டிரா மாநிலத்தை சேர்ந்தவரின் புல்லி ஆப் (Bully App ) பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்! 

இது போன்ற நிலை நம்முடைய இஸ்லாமிய பெண்களுக்கும் மற்ற எந்த ஒரு பெண்களுக்கும் வந்துவிட கூடாது என்கிற நோக்கத்தின் அடிப்படையில் இந்த பதிவை நாங்கள் பகிர்கிறோம்.
மேலும் ஆன்லைனில் ஆர்டர் செய்து அதன்மூலம் சிலபேர் விரிக்கும் வலைகளில் விழுந்து இரையாவதை விட்டும் நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

தங்களுக்கு ஏதேனும் தவறான அழைப்புகள் டெலிவரி மேன் என்றோ வேறு எது தொடர்பான தெரியாத அழைப்புகள் வந்தாலோ எங்களுடைய என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்ணிற்கு தங்களின் தந்தை,கணவர் அல்லது சகோதரர் மூலமாக உதவிகளை கேட்கலாம்.
(அது முற்றிலுமாக ரகசியம் காக்கப்படும் மேலும் இது தொடர்பாக சமரசமில்லாது நடவடிக்கையும் எடுக்கப்படும்)
தேவையற்ற செயல்களை நாம் நம்மில் விதைக்கும் போது ஆபத்தான விளைவுகளையே அறுவடை செய்கிறோம் என்பதை மறவாதீர்! 
 
நம்முடைய கோபாலப்பட்டிணத்தை  சமூகத்தில் தவறுகளற்ற நீதியோடும் மார்க்கம் தடை செய்த மது,மாது,சூதாட்டம் போன்றவற்றை அப்புறப்படுத்தி கல்வியில் சிறந்த குழந்தைகளை உருவாக்கி மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றும் நாங்கள் உறுதியேற்கிறோம்.

ஊரின் வளர்ச்சிக்கு என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை எந்த ஒரு பிரதிபலனும் இன்றி சுயநலமும் இன்றி பாடுபடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கண்காணிப்பு குழு,
என்றும் உதவும் கரங்கள்,
கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை,
கோபாலப்பட்டிணம்,
மீமிசல்- 97879 56584 , 85266 30312


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments