புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது: ஜனவரி 14, 1974




தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம். ஜனவரி 14, 1974ல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த மாவட்டத்தின் வடக்கிலும் மேற்கிலும் திருச்சியும், தெற்கில் சிவகங்கை மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், வட கிழக்கில் தஞ்சை மாவட்டமும் அமைந்துள்ளன.

ஒரு வறட்சியான மாவட்டமாகவே புதுக்கோட்டை உள்ளது. மாவட்டத்தின் நீர் வரத்து பெரும்பாலும் பருவ மழையை நம்பியே உள்ளது.

இம்மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உள்ளன. குளத்தூர், இலுப்பூர், ஆலங்குடி, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, திருமயம், பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் மற்றும் மணமேல்குடி ஆகிய வட்டங்களும் உள்ளன. இவற்றுள் 756 பெரிய வருவாய் கிராமங்களும் அடங்கும்.


இன்று புதுக்கோட்டை மாவட்டம் ( 14 - 01- 1974) உதயமான நாள். "Pudukkottai Day".

மாட்சிமை தாங்கிய பிரகதாம்பாள் தாஸ் H.H தொண்டைமான் மன்னர்கள் புதிய கோட்டை கொத்தளங்களுடன் கூடிய புதிய நகரை நிர்மாணித்து அதற்கு "புதுக்கோட்டை " என பெயரிட்டு 1686- 1948 வரை இன்றைய இந்தியாவை போன்று தனி நாணயம், தனி கொடி என தனி நாடாக கோலோச்சினர்.

அன்றைய இந்தியாவிலேயே முதன்முதலாக பேருந்துகள் , மகிழுந்து போன்றவை அறிமுகப்படுத்தியவர்கள் எங்களது மாட்சிமை தாங்கிய மாமன்னர்கள் தான்.

இன்றைய தமிழகத்திலேயே முதல் நூற்றாண்டு கண்ட நகராட்சியும் எங்களது புதுக்கோட்டை தான்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 3-3-1948 வரை தனி சமஸ்தானமாக கோலோச்சி வந்த எமது சமஸ்தானத்தை அன்றைய சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர் உயர்திரு.சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க அன்றைய கால கட்டத்தில் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மாட்சிமை தாங்கிய மாமன்னர் பிரகதாம்பாள் தாஸ் H.H இராஜகோபால தொண்டைமான் அவர்கள் இந்தியாவுடன் இணைத்திட இசைவு தெரிவித்தார். 

அதன்படி எண்ணிலடங்கா சொத்துக்களையும் அன்றைய சமஸ்தானம் கருவூலத்தில் இருந்த ₹72 இலட்சம் பணத்துடன் புதுக்கோட்டை சமஸ்தானத்தை 3- 3- 1948ம் ஆண்டு இந்தியாவுடன் இணைத்தார்.

இந்தியாவுடன் இணைக்கப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானம் அன்றைய சென்னை மாகாணத்தின் திருச்சி ஜில்லாவின் ஒரு வருவாய் கோட்டமாக இருந்து 14- 01- 1974ம் ஆண்டு தமிழகத்தின் 15-வது மாவட்டமாக "புதுக்கோட்டை "மாவட்டம் உதயமானது. 

அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களின்  வேண்டுகோளுக்கிணங்க சமஸ்தானத்தின் புதிய அரண்மனையை புதிய மாவட்டத்தின் ஆட்சி தலைவர் அலுவலகம் அமைத்திட தமிழக அரசிடம் ஒப்படைத்தார் எங்களது மாமன்னர்.  இன்றைய இந்தியாவிலேயே அதிக நிலப்பரப்பில் (99.99 ஏக்கர்) அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரகம் எங்களது புதுக்கோட்டை மட்டும்தான். 

ஆசியாவிலேயே மிகப்பெரிய பெருமாளும், உலகிலேயே வடக்கு திசை பார்த்து தனி சன்னதியில் வீற்றிருக்கும் பைரவர், தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கோத்பவர்  (திருமயம்)  

2) தென் இந்தியாவிலேயே மிகப்பெரிய சிவன் சிலையும் (நக்கீரமங்கலம்),

 3)உலகிலேயே முதன்முதலாக சாம்பிராணி போட்ட தலம் ( தீயத்தூர்) 

இவ்வளவு பெருமை மிகுந்த எமது புதுக்கோட்டை மாவட்டம் உதயமான நாள் இன்று.

நமது மாவட்டத்தின் பெருமை நமது பெருமை.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments