ஆவுடையார்கோவில் அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
ஒவ்வொரு ஆண்டும் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளான ஜனவரி 12-ந்தேதி நாடு முழுவதும் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று இளைஞர் எழுச்சி நாள் மற்றும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி விவேகானந்தர் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். முதுகலை வரலாற்று ஆசிரியர் மதியழகன் இளைஞர் எழுச்சி நாள் உறுதிமொழியை வாசிக்க, அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அப்போது பள்ளி நாட்காட்டி அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும் பள்ளியில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments