திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சேவை உடனடியாக தொடங்கிட வேண்டுமென தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் நாகை எம்பி எம்.செல்வராசு வலியுறுத்தல்.






திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சேவை உடனடியாக தொடங்கிட வேண்டுமென தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம்  நாகை எம்பி எம்.செல்வராசு  வலியுறுத்தல்.

   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் #எம்_செல்வராசு அவர்கள், தெற்கு ரயில்வே பொது மேலாளர் திரு ஜான் தாமஸ் அவர்களை சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் நேரில் சந்தித்து நாகப்பட்டினம் தொகுதிக்கான ரயில் சேவைகள் வழங்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

       திருவாரூர் - காரைக்குடி ரயில் மார்க்கத்தில் 72 இடங்களில் கேட் கீப்பர் நியமிக்கும் பணியை விரைந்து முடித்து ரயில் நிர்வாகம் ஒப்புக்கொண்டபடி பிப்ரவரியில் முழுமையான ரயில் சேவை வழங்கிட வேண்டும். திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகலப் பாதை அமைக்கும் பணியில் LUS எனப்படும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

      நாகப்பட்டினம் - திருச்சி மார்க்கத்தில் பயணிகள் ரயில் இயக்குதலை கூடுதல் படுத்த வேண்டும். நாகூர், வேளாங்கண்ணியை மையப்படுத்தி தேவைப்படும் ரயில் சேவைகள் குறித்தும் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட தமது கோரிக்கைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நாகப்பட்டினம் தொகுதிக்கான ரயில் சேவைகளை தென்னக ரயில்வே நிர்வாகம் வழங்கிட வேண்டுமென நாகை எம்.பி., தென்னக ரயில்வே மேலாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments