கோட்டைப்பட்டினம் தபால் நிலையத்தில் இணைய சேவை பாதிப்பு; பொதுமக்கள் அவதி
கோட்டைப்பட்டினம் ஊராட்சி மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சி ஆகும். இங்கு சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது. இந்நிலையில் இதே பகுதியில் தபால் நிலையம் இயங்கி வருகிறது .
இந்த தபால் நிலையத்தில் தினந்தோறும் மக்கள் தபால் அனுப்புவது, மணியார்டர், ஆதார் பதிவு போன்ற பல்வேறு சேவைகளை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள தபால் நிலையத்திலுள்ள இணைய சேவை சுத்தமாக இயங்கவில்லை. இதனால் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். ஒரு சில நபர்கள் அருகே உள்ள மீமிசல் மற்றும் மணமேல்குடி ஆகிய ஊர்களில் சென்று தபால்கள் அனுப்பி வருகின்றனர். ஆகையால் தபால் நிலையத்தில் செயல்படாத இணைய சேவையை உடனே சரி செய்து தரும்படி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments