சுதந்திர தின விழா கொண்டாட்ட போட்டியில் பங்கேற்க அழைப்பு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
நாட்டின் 75-ம் சுதந்திரதின விழா ஆண்டின் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக தாலுகா தொடங்கி மாநிலம் முழுவதும் 10 வயதுக்கு மேற்பட்டோர் இந்திய குடிமக்கள் பல்வேறு போட்டிகளில் பங்குபெற விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவரங்கள் https://amritmahotsav.nic.in.competitions.htm என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. தங்களது படைப்புகளை ஒளிப்பட வடிவில் மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தாலுகா அளவிலான போட்டிகள் வருகிற 31-ந் தேதி வரையும், மாவட்ட அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையும், மாநில அளவிலான போட்டிகள் மார்ச் 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையும், இறுதியாக தேசிய அளவிலான போட்டிகள் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி அன்றும் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். எனவே மேற்காணும் போட்டிகளில் தகுதியுள்ள அனைவரும் பங்கு பெற்று இந்திய அரசின் சுதந்திரதின விழா சிறப்பாக நடைபெற பங்களிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாக முதல் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ 04322-299382 தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments