வணிக நிறுவனங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை கலெக்டர் கவிதாராமு எச்சரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் நோயிலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டும் வணிக நிறுவனங்கள், கடைகள் நுழைவுவாயிலில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள், கட்டாயமாக வைக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிவதை நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments