8ஆம் வகுப்பு படிக்கும்‌ மாணவர்களுக்கு வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கல்வி உதவி தொகை பெற வழிமுறைகள்




தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம் (NMMS)

 (NATIONAL MEANS CUM - MERIT SCHOLARSHIP SCHEME)

பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களின் குழந்தைகள் தங்கள் படிப்பை இடைநிறுத்தம் செய்யாமல் தொடர்ந்து படிப்பதற்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம் (NMMS)

இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதுமுள்ள ஒரு இலட்சம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் மாணவர்களை தேர்ந்தெடுக்க மாநில அரசின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தனி தேர்வு நடத்தப்படும் அந்தத் தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு

9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூபாய் 1000/- வீதம் ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 12000 /- கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

#தகுதிகள்

• பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ :1,50,000/-த்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

• இத்தேர்வில் பங்கேற்க ஏழாம் வகுப்பில் 55 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

• இத்தேர்வில் பங்கேற்று தேர்வான மாணவர்   எட்டாம்  வகுப்பில் 55 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்.

• 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில வேண்டும்

• MAT / SAT ஆகிய இரண்டு தேர்விலும் 40% மதிப்பெண்கள் பெற வேண்டும்

• தொடர்ந்து ஊக்கத்தொகை பெற 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பில் 55     சதவிகிதத்துடன் தேர்ச்சி பெற வேண்டும். மேலும்  பத்தாம் வகுப்பில் 60 சதவிகிதத்துடன் தேர்ச்சி பெற வேண்டும்

விண்ணப்பிக்ககடைசிநாள்:

வழக்கமாக அக்டோபர் மாதம்.

இந்த ஆண்டு அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை

தேவையான ஆவணங்கள்

• பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்

• மாணவரின் புகைப்படம்

• SBI அல்லது ஏதேனும்  பொதுத்துறை வங்கியில் மாணவரின் பெயரில் சேமிப்புக் கணக்கு (SB Account)

விண்ணப்பிக்கும் முறை

• நடப்பு ஆண்டில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்

• விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்  பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

• புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம்  சேர்த்து தலைமை ஆசிரியரிடம் ஓரிரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர் செய்ய வேண்டியவை
 
• தலைமை ஆசிரியர் தமது பள்ளியை EMIS இணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் மேலும் அதில் குறிப்பிட்டுள்ள Management Code ஐ சரிபார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்

• விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டிய இணையதளம் www.dge.tn.gov.in மற்றும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் அவற்றை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்

• தேர்வுக் கட்டணத்தை மொத்தமாக மாவட்ட கல்வி அலுவலகத்தில் செலுத்த வேண்டும்

• ஆதார் கார்டில் உள்ள பெயரும், விண்ணப்பிக்கும் மாணவர்  பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

• ஆதார் கார்டில் மாணவர் பெயர் தவறாக இருந்தால் பெயரை திருத்தம் செய்து விட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
 
தேர்வு நடைபெறும்நாள்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்:- 27/01/2022

தேர்வு நடைபெறும் நாள்:- 05/03/2022

தேர்வு_முறை

NMMS தகுதித் தேர்வானது MAT / SAT என இரண்டு பகுதிகளைக் கொண்டது.

1. மனத்திறன் தேர்வு (Mental Ability Test- MAT)

வினாக்களின் எண்ணிக்கை - 90

மதிப்பெண்கள் - 90

காலஅளவு - 90 நிமிடம்
 
A. எண்ணியல் திறன் (Numerical Ability) (45 வினாக்கள்)

 a) பாடப்பொருள் சார்ந்தது

 b) பாடப்பொருள் சாராதது

B. காரணம் கண்டறிதல் (Reasoning Ability) (45 வினாக்கள்)

a) மொழிசார் காரணம் கண்டறிதல் திறன் (Verbal Reasoning)

b) மொழிசாரா காரணம் கண்டறிதல் திறன் (Non Verbal Reasoning)

2. படிப்பறிவு திறன் தேர்வு (Scholastic Ability Test)

வினாக்களின் எண்ணிக்கை - 90

மதிப்பெண்கள் - 90

காலஅளவு - 90 நிமிடம்

1. கணிதம் (20 வினாக்கள்)

2. அறிவியல் (35 வினாக்கள்)

3. சமூக அறிவியல் (35 வினாக்கள்)

 

(மாற்று திறனாளி மானவர்களுக்கு கூடுதல் நேரம் உண்டு)

1. மனத்திறன் தேர்வு (Mental Ability Test) (பொது அறிவு தொடர்பான கேள்விகள்)
முற்பகல் 

2. கல்வித்திறன் தேர்வு (Scholastic Aptitude Test) (7 ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு அறிவியல் சமூக அறிவியல் மற்றும் கணிதப் பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும்)
  பிற்பகல்   

மேலும் விவரங்களுக்கு

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும் அல்லது
உங்கள் பகுதியில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையை / TNTJ - Students Wing மாணவரணியை தொடர்பு கொள்ளவும்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு...
 https://scholarships.gov.in/public/schemeGuidelines/NMMSSGuidelines.pdf

தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
மாணவரணி


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments