அறந்தாங்கியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு: பரிசுகளை தட்டிச் சென்ற காளையும், காளையரும்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செட்டிகாட்டில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

பொங்கல் பண்டிகையை ஒட்டி அறந்தாங்கி அருகேயுள்ள செட்டிகாட்டில் மஞ்சு விரட்டு நடைபெற்றது. காளைகளை அவிழ்த்து விடப்படும் இடத்தில் இருந்து 20 மீட்டர் தொலைவுக்குள் மாட்டை பிடித்துவிட்டால் அந்த மாடு பிடிமாடு என அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி நடத்தும் கமிட்டியாளர்கள் வழங்கும் பரிசு மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் அறிவித்த பரிசும் வழங்கப்பட்டது. அதேபோல் பிடிபடாத மாட்டின் உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் நின்று வேடிக்கை பார்த்தனர். பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இந்த மஞ்சுவிரட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments