ரேஷன் கடையில் பொருட்கள் எடை குறைவாக வழங்குவதாக கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்




 பழையகூடலூர் ரேஷன் கடையில் பொருட்கள் எடை குறைவாக வழங்குவதாக கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

குத்தாலம் அருகே பழையகூடலூர் ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாகவும், பொருட்கள் எடை குறைவாகவும், பாரபட்சமாகவும் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்ட வழங்கல் அலுவலர் காந்திமதி, குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் மற்றும் பாலையூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தங்களது ரேஷன் கார்டுகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாகவும் பொதுமக்கள் கூறிவிட்டு சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments