அடுத்தவர்களுக்காக வரிசையில் நின்று தினமும் ரூ.16,000 சம்பாதிக்கும் நபர்!
அடுத்தவர்களுக்காக வரிசையில் நின்று தினமும் ரூ.16,000 சம்பாதிக்கும் நபர்!


லண்டன்: வரிசையில் நிற்க நம்மில் எத்தனை பேருக்கு பொறுமை இருக்கிறது. ஆனால் அந்தப் பொறுமை தான் இந்த நபருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் அன்றாடம் சுமார் ரூ.16,000 சம்பாதித்துக் கொடுக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

லண்டனைச் சேர்ந்த ஃப்ரெட்டி பெக்கிட் இதைக் கடந்த மூன்றாண்டுகளாக கூடுதல் தொழிலாகவே செய்து வருகிறது. பிரிட்டன் பணத்தில் அன்றாடம் சர்வ சாதாரணமாக 160 பவுண்ட் சம்பாதிக்கிறார். ஃப்ரெட்டி அடிப்படையில் வரலாற்றுக் கதை எழுதுபவர். ஆனால், சரித்தரம் அவரைப் பற்றி ப்ரொஃபஷனல் க்யூயர் என்று அடையாளப்படுத்தியிருக்கிறது.


லண்டன் நகரில் ஃபுல்ஹாம் பகுதியைச் சேர்ந்தவர் ஃப்ரெட்டி. அவருடைய க்ளையன்டுகளில் பலர் கைக்குழந்தைகளையும், வயதானவர்களையும் வீட்டில் பராமரிக்க வேண்டியவர்கள் எனக் கூறுகிறார். இன்னும் சிலர் வரிசையில் நிற்க முடியாத செல்வந்தர்களாம்.
தி சன் பத்திரிகைக்கு அவர் அளித்தப் பேட்டி: எனது 60 வயது க்ளையன்ட்டுகள் சிலருக்காக நான் சுமார் 8 மணி நேரம் வரை வரிசையில் நின்றுள்ளேன். டிக்கெட் வாங்க அதிகபட்சமாக 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் சிலர் டிக்கெட் வாங்கிவிட்டு தாங்கள் வரும் வரை உள்ளே செல்வதற்கான வரிசையில் நிற்குமாறு கூறுவார்கள். அதற்காக மணிக்கு 20 பவுண்ட் தருவார்கள்.கிறிஸ்துமஸ் ஷாப்பிங் வரிசையில் நின்றிருக்கிறேன், அப்பல்லோ தியேட்டர்ஸில் நடைபெறும் மிகப் பெரிய இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் பெறு வரிசையில் நின்றிருக்கிறேன். இதுபோன்ற மிகப் பெரிய நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை வரிசையில் நின்று பெற வேண்டிய சூழல் வரும்போது என்னைப் பற்றி அறிந்தவர்கள் என்னை முன்கூட்டியே புக் செய்து கொள்வார்கள் எனக் கூறினார்.

ஃப்ரெட்டி தனது வேலை பற்றி https://www.taskrabbit.co.uk/ டாஸ்க் ரேபிட் என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்.

வரிசையில் நிற்பதையும் தாண்டி செல்லப்பிராணிகளைப் பார்த்துக் கொள்ளுதல், வீட்டை மாற்றுவோருக்கு உதவுவது, சிறுசிறு வேலைகளை செய்து கொடுப்பது, தோட்டவேலை செய்வது எனப் பல வேலைகளையும் செய்து கொடுப்பதாகக் கூறுகிறார்.தொடர்ந்து அவர் கூறுகையில், நான் வேலை தேடினேன். அப்போதுதான் இப்படியான சிறு வேலைகளைப் பற்றி, எந்தத் திறமையுமே தேவைப்படாத வேலையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். டாஸ்க்ரேபிட்டில் என்னால் என்ன செய்ய முடியுமென்பதைப் பட்டியலிட்டேன். இன்று அன்றாடம் ஒரு மணி நேரத்துக்கு 20 பவுண்ட் சம்பாதிக்கிறேன். இனிமேல் இதில் என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது. குறிப்பாக நான் நினைக்கும் நேரத்தில் வேலை செய்கிறேன். நினைக்கும் நாளில் செய்கிறேன். எழுதுவதற்கான நேரத்தை என்னால் நிர்ணயிக்க முடிகிறது. எனது நண்பர்களும், உறவினர்களும் எனது வேலை நகைப்பூட்டுவதாகக் கூறுகின்றனர். ஆனால் யாரும் எனது சம்பாதியத்தைக் கேட்டு ஆச்சர்யப்படாமல் இல்லை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments