கந்தர்வக்கோட்டையில் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடக்கம்


புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட புதிய மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

கந்தர்வக்கோட்டையில் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடக்கம்

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம்தேடி கல்வி திட்ட புதிய மையங்கள் மஞ்சம்பட்டி மற்றும் கொத்தகபட்டி கிராமங்களில் தொடங்கப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  கவிதா ராமு உத்தரவுப்படி, முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி வழிகாட்டுதலின் படியும் கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சம்பட்டி மற்றும் கொத்தகபட்டி கிராமங்களில் புதிய மையங்கள் தொடங்கப்பட்டது, 

நிகழ்வில் மஞ்சம்பட்டி தலைமையாசிரியர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். கந்தர்வகோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராசு, ரகமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார செயலாளர் சின்னராஜா விழிப்புணர்வு பாடல்கள் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.  இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கொரோனா காலத்தில் மாணவர்களிடம் விட்டுப்போன கல்வியை சரிசெய்யும் விதமாக இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் நிரோஷா, லோகாம்பாள், கிருத்திகா, பானுப்பிரியா, சீலாராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


மஞ்சம்பட்டியில் இல்லம் தேடி கல்வித்திட்ட புதிய மையம் தொடங்கப்பட்ட போது எடுத்த படம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments