தொழில் முனைவோராக வேளாண் பட்டதாரிகளுக்கு கலெக்டர் கவிதா ராமு அழைப்பு விடுத்துள்ளார்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது 

புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 2021&22&ம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும்  91 கிராம பஞ்சாயத்துக்களில் வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் வேளாண் தொழில் முனைவோராகலாம். 

இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் தேர்வு செய்யப்பட்ட கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட, அரசு மற்றும் தனியார் நிறு வனத்தில் பணியில் இல்லாத சிறந்த கணினி புலமையுள்ள வேளாண்மை தொடர்புடைய செயலிகளை பயன்படுத்தும் திறனுள்ள பட்டதாரிகள் 7 நபர்கள் வேளாண் தொழில் முனைவோராக செயல்பட அரசாணைப் பெறப்பட்டுள்ளது.

இதன்மூலம் அக்ரி கிளினிக் அமைத்தல் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களான காளான் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், பசுமைக்குடில் அமைத்தல், வேளாண் உபரணங்கள் வாடகை மையம் அமைத்தல், விதை உரம், பூச்சி மருத்து விற்பனை நிலையங்கள் மற்றும் நுண்ணீர் பாசனக் கருவிகள் சேவை மையம் ஆகியன அமைப்பதற்கு உட் கட்டமைப்பு நீங்கலாக 2 லட்ச ரூபாய் மற்றும் அதற்கு மேல் உள்ள திட்ட பிரேரணைக்கு அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப் படவுள்ளது. 

எனவே, வேளாண்மைத் தொழில் முனைவோராக செயல்பட தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
 
மேலும் கூடுதல் தகவல் களை பெற சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை, வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments