புதுக்கோட்டையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதுக்கோட்டை வட்டார கிளையின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் துர்காதேவி தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகப்பிரியா கோரிக்கைகளை விளக்கி பேசினார். கல்வி வட்டச் செயலாளர் நடனம் நிறைவுரையாற்றினார். 

 பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வு நடைமுறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை களைய வேண்டும். ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments