லஞ்சம் பெற்று ஆவணங்களை விற்றதாக வீடியோ வைரல்:புதுக்கோட்டை பெண் ஊழியர் பணியிடை நீக்கம்கலெக்டர் நடவடிக்கை

லஞ்சம் பெற்று ஆவணங்களை விற்றதாக வீடியோ வைரல் ஆனதையடுத்து புதுக்கோட்டை பெண் ஊழியரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆவணங்களை விற்றதாக வீடியோ
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆவண காப்பகம் அறை உள்ளது. இங்கு பழைய ஆவணங்கள், நில உடைமைகளின் ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஒருவர் பழைய நில ஆவணத்தின் நகல் பெற வேண்டுமானால், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) விண்ணப்பித்து பெற வேண்டும். 

இந்த நிலையில் ஆவண காப்பக அறையில் உதவியாளராக பணியாற்றிய நாகம்மாள் என்பவர், பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ஆவணங்களின் நகல்களை விற்பதாக சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலானது. 
பணியிடை நீக்கம்
இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட வருவாய் அலுவலருக்கு கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். மேலும் நாகம்மாளை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் கவிதாராமு நேற்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments