கோபாலப்பட்டிணத்தில் இறுதி கட்டத்தை எட்டிய செல்போன் கோபுரம் அமைக்கும் பணி! விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்!! கோபாலப்பட்டிணம் மக்கள் மகிழ்ச்சி!!!
கோபாலப்பட்டிணத்தில் தனியார் நிறுவனத்தின் புதிய செல்போன் கோபுரம் (டவர்) அமைக்கும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் புதிய செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. கோபாலப்பட்டிணத்திற்கு என்று தனியாக செயல்பட்டு வந்த செல்போன் கோபுரம் செயலிழந்ததாலும் தற்பொழுது செல்போன் கவரேஜ் சரியாக கிடைக்காததாலும் மாணவ செல்வங்கள் இணைய வழியில் படிப்பதற்கும், அயல் நாட்டில் உள்ள உறவினர்களுடன் கலந்துரையாடுவதற்கும் மக்கள் பெரும் சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு அவசர செய்தியை கூட பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில்  மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர் கோபாலப்பட்டிண மக்கள்.

செல்போன் ஒலித்தால் வீட்டை விட்டு வெளியிலோ அல்லது மாடிக்கோ சென்று தான் பேசும் நிலைமை  உள்ளது. இதனால் முதியவர்களும், பெண்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.  

செல்போன் சிக்னல் கிடைக்காததால் செல்போனை ஒரு சிலர் வீட்டின் வெளிப்பகுதியிலும், ஜன்னல் ஓரங்களிலும் மற்றும் வீட்டு மாடியிலும்  வைத்துக் கொண்டு காத்திருப்பதும் வாடிக்கையாகி போனது. மேலும் மாணவ செல்வங்களின் படிப்புகளும் பாதிப்புக்குள்ளானது. 

கடந்த 27.12.2021 தேதியில் தனியார் நிறுவனம் தனது புதிய செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை துவக்கி பணி நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

 மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செல்போன் கோபுரம் அமைக்கபெற்று விரைவில் செயல்பாட்டிற்கு வந்தால் கோபாலப்பட்டிணம் உள்நாடு ‌, வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் ‌கோபாலப்பட்டிணம் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments