ஜனவரி 17 ஆம் தேதி அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு


தமிழ்நாட்டில் வரும் 17 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 17 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 18 ஆம் தேதி தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை என்பதால், 17 ஆம் தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 17 ஆம் தேதி விடுமுறையை  ஈடு செய்யும் வகையில் ஜனவரி 29 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசின் இந்த அறிவிப்பால், வெள்ளிக்கிழமை (ஜனவரி 14) முதல் செவ்வாய்க்கிழமை வரை  தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு  அரசின் இந்த அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், அன்றைய தினம் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப முடியாத நிலை இருந்தது. தற்போது திங்கள் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பொங்கள் கொண்டாட சென்றவர்கள் சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள முடியும்.

கொரோனா பரவி வருவதால் விடுமுறையில் பொதுமக்கள் வெளியே சுற்றாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14, ஜனவரி 15 என இரு நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 16, ஜனவரி 17, ஜனவரி 18 என 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments