புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சி, 8 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல்






புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சி, 8 பேரூராட்சிகளுக்கு உள் ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் நகர்ப்புற உள் ளாட்சி தேர்தல் தொடர் பான தேதி அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இதில் வேட்பு மனு தாக்கல் நாளைதேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடைபெறஉள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகளில் வார்டு கவுன்சிலர்களுக்கும், அன்னவாசல், அரிமளம், இலுப்பூர், கீரனூர், கீரமங்கலம், ஆலங்குடி, பொன்னமராவதி, கறம்பக்குடி ஆகிய 8 பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டு கவுன்சிலர்களும், அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டு கவுன்சிலர் களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வார்டு உறுப்பினர்கள்

பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர்களை பொறுத்த வரை தலா 15 பேர் தேர்ந்தெ டுக்கப்பட உள்ளனர். இதுத விர நகராட்சிகளில் தலைவர் துணை தலைவர் பதவிகளுக் கும், பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர் பதவிக ளுக்கும் மார்ச் மாதம் 4-ந் மறைமுக தேர்தல் நடை பெற உள்ளது.

புதுக்கோட்டை நகராட்சியில் 28, 42 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்டவர்களில் பொது வார்டாகவும், 32, 33, 37ஆகிய வார்டுகள் தாழ்த்தப் பட்டவர்களில் பெண்களுக் கும், 3, 6, 7, 8, 9, 11, 12, 13,14, 18, 19, 21, 24, 26, 30, 31, 36, 39 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவில் பெண்களுக்கும் ஒதுக்கப்பட் டுள்ளது. இதுதவிர மீதமுள்ள வார்டுகளான 1, 2, 4, 5, 10, 15, 16, 17, 20, 22, 23, 25, 27, 29, 34, 35, 38, 40, 41 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவாகும். இதில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இதே போல அறந்தாங்கி நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளன.வாக்குப்பதிவு தேதி அறிவிப்பு வெளியான நிலையில் தேர்தல் திருவிழா தொடங்க ஆரம்பித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments