தமிழகத்தில் நாளை(ஜன.23) ஆம்னி பேருந்துகள் இயங்காது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்


தமிழகத்தில் நாளை(ஞாயிறு) முழு ஊரடங்கு நாளில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா  நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாளை (ஜன. 23) ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசுப் பேருந்துகள் இயங்காத நிலையில், நாளை ஒருநாள் ஆம்னி பேருந்துகளும் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் (ஜன.24) முதல் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, பயணிகளின் நலன் கருதி சென்னை சென்ட்ரல்,  எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் மொபைல் செயலிகள் மூலமாக ஆட்டோ, டாக்சிகளை முன்பதிவு செய்து செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments